வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியா சுமாத்ரா தீவு பகுதியில் 6.8 ரிச்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்றபட்டுள்ளதாகவும், இதனால், இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் வளிமண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் 42.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. அந்த தீவில் உள்ள சில வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளன. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக